Categories
தேசிய செய்திகள்

IRCTC ஈஸியாக ரயில் டிக்கெட் புக் செய்யவது எப்படி…? முழு விவரம் இதோ…!!!!!

வெளியூர்களில் வேலை செய்து வரும் அனைவரும் திருவிழா சீசன் தொடங்குவதன் காரணத்தால் தன்னுடைய சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்கு முன்கூட்டியே ரயிலில் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்ய தொடங்கி இருக்கின்றார்கள். ஆனால் இதில் பலருக்கும் டிக்கெட் கன்ஃபார்ம் என்பது மிகவும் சிரமமான ஒரு விஷயமாக உள்ளது. ஒருவேளை முன்பதிவு செய்து டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் தற்போது ஐ ஆர் சி டி சி இணையதளத்திற்கு சென்று டிக்கெட் எளிதாக முன்பதிவு செய்து கொள்ளலாம். டிக்கெட் முன்பதிவு செயல் முறையை ஐ ஆர் சி டி சி மேலும் எளிதாக்கிவிட்டது. இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் வெளியிட்ட சாட்போட் மூலம் டிக்கெட்டுகளை பதிவு செய்ய தனி நபர்களை அனுமதிக்கும் சேவையை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

இந்திய ரயில்வே 2018 அக்டோபரில் AskDisha என்ற Ai இயங்கும் சாட் போட்டை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதில் Disha என்பது Digital interaction to seek help anytime இதன் கீழ் வாடிக்கையாளர்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்வது முதல் அவர்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் வரை தீர்க்கப்படுகின்றது. மேலும் பயணிகள் சார் போர்டை பயன்படுத்தி தங்கள் பயணத்திற்கான முன்பதிவு செய்து கொள்ள முடிகிறது. சாட் போர்ட் மூலமாக முன்பதிவு செய்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் ஐஆர்சிடிசி இணையதளத்திற்கு செல்வது அல்லது செயலியை பயன்படுத்துவது போன்ற சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியதில்லை.

மேலும் புள்ளி விவரங்களின்படி தினமும் 10 லட்சத்திற்கும் ஏராளமானோர் ஐஆர்சிடிசி இணையதளத்தை பயன்படுத்துகின்றார்கள். இந்த எண்ணிக்கையானது ரயில் நிலையங்களில் இருந்து டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு நிம்மதி அளிக்கிறது. மேலும் இந்த சேவைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது ஒரு பயணி யு பி ஐ மூலம் பணம் செலுத்தினால் ஐ ஆர் சி டி சி ஸ்லிப்பர் வகுப்பிற்கு பத்து ரூபாய் அதிகமாகவும் ஏசி பெர்த்துக்கு 15 ரூபாய் அதிகமாகவும் வசூலிக்கும். இதில் வேறு ஏதேனும் கட்டண முறை மூலம் கட்டணம் செலுத்தினால் இந்திய ரயில்வே வகுப்பிற்கு ரூபாய் 20 கூடுதலாகவும் ஏசி வகுப்பிற்கு 30 ரூபாய் கூடுதலாகவும் சமீபத்தில் இந்திய ரயில்வேயால் ஒரு வசதி தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இந்த வசதியின் கீழ் பயணிகள் whatsapp மூலம் உணவை ஆர்டர் செய்ய ரயில்வே அனுமதி வழங்குகிறது வசதியை பயன்படுத்தி ஒரு பயணி தனது பெர்த்தில் எளிதாக உணவை பெற்றுக் கொள்ளலாம்.

Categories

Tech |