Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அனைத்து…. கல்லூரி மாணவ மாணவிகள் சத்தியம் செய்யவும்…. யுஜிசி அதிரடி உத்தரவு….!!!

அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சிசிடிவி கேமராக்கள் கட்டாயம் பொருத்த வேண்டும் என்று யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது.நாடு முழுவதும் உள்ள பல்வேறு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் ராகிங் சம்பவங்களால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் வகையில் புதிய நடவடிக்கையை யுஜிசி மேற்கொண்டுள்ளது.

அவ்வகையில் அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என்றும் விடுதிகள், உணவகங்கள் மற்றும் கழிப்பறைகளில் போஸ்டர்களை ஒட்டி ராகிங் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் முக்கிய இடங்களில் எச்சரிக்கை மணியை பொருத்த வேண்டும் என்றும் ராகிங் செய்ய மாட்டேன் என அனைத்து மாணவ மாணவிகளும் www.antiragging.inஎன்ற இணையதளத்தில் பதிவு செய்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |