பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 2004-ம் ஆண்டு பழைய ஓய்வூதிய திட்டம் நிறுத்தப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு புதிய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என அக்கட்சியின் தலைவரும், நிதி அமைச்சருமான ஹர்பால் சிங் சீமா வாக்குறுதி கொடுத்திருந்தார்.
இந்நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக பரிசீலனை நடைபெற்று வருவதாக முதல் மந்திரி பகவந்த் மான் கூறியுள்ளார். இது தொடர்பாக பகவந்த் மான் தன்னுடைய twitter பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது தொடர்பாக பரிசீலனை நடைபெறுகிறது. அதை செயல்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் மற்றும் வழிமுறைகள் இருக்கிறதா என்பதை தலைமைச் செயலாளரிடம் ஆய்வு செய்ய கூறியுள்ளேன். எங்கள் ஊழியர்களின் நலனில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.
My government is considering reverting to the Old Pension System (OPS). I have asked my Chief Secretary to study the feasibility and modalities of it’s implementation. We stand committed to the welfare of our employees.
— Bhagwant Mann (@BhagwantMann) September 19, 2022