Categories
மாநில செய்திகள்

“வேகமாக பரவும் H1N1 இன்ஃப்ளுவன்ஸா வைரஸ்” மீண்டும் அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்….? தமிழக அரசுக்கு கோரிக்கை….!!!!

தமிழகத்தில் கொரோனா வைரஸை தொடர்ந்து தற்போது H1N1 இன்ஃப்ளுவன்ஸா வைரஸ் பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கின்றனர். இந்த வைரஸை கட்டுப் படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் உட்பட பலர் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் H1N1 இன்ஃப்ளுவன்ஸா வைரஸ் பரவல் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.

சென்னையில் பல மருத்துவமனைகளில் காய்ச்சலுடன் சிகிச்சைக்காக வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. H1N1 இன்ஃப்ளுவன்ஸா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பள்ளிக்கல்வித்துறை மற்றும் அரசு மருத்துவர்களின் உதவியோடு மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ள பள்ளிகளில் மருத்துவ முகாம்கள் நடத்துவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். H1N1‌ இன்ஃப்ளுவன்ஸா வைரஸ் பரவல் குறையும் வரை பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும். நோய் பரவலை தடுப்பதற்கு மக்களும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று பாஜக தமிழ்நாடு சார்பில் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |