தமிழகத்தில் 2020-2021 ஆம் ஆண்டு முதுகலை பட்டதாரி, ஆசிரியர் உடற்கல்வி இயக்குனர் நிலை-1 உள்ளிட்ட பணியிடத்திற்கு கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை கணினி மூலம் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வு மூலம் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 3,236 பணியிடங்களில் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை மாதத்தில் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்புக்குரிய பணிகள் நடைபெற தொடங்கியது. அதன்படி கடந்த செப்டம்பர் 2 முதல் 4 ஆம் தேதி வரை 17 பாடத்திற்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. இதில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் 1-10 ஆம் வகுப்பு, 11-12 வகுப்பு, டிப்ளமோ படிப்பு, இளங்கலை பட்டம், முதுகலைப்பட்டம், கல்வியியல் இளங்கலை பட்டம் மற்றும் உடற்கல்வி இயக்குனர் பணியிடத்திற்கு விண்ணப்பித்தவர்கள் இளங்கலை பட்டம் மற்றும் முதுகலை பட்டம் உள்ளிட்ட படிப்புகளில் தமிழ் வழியில் பயின்றால் அதற்குரிய அனைத்து சான்றிதழையும் பதிவேற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டார்கள்.
அதன் பிறகு இதன் அடிப்படையாகக் கொண்டு 11 பாடப்பிரிவுகளில் ஆசிரியர்கள் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டார்கள். அதுமட்டுமில்லாமல் இதற்கான பெயர் பட்டியலை http://trb.tn.nic.in/ என்ற இணையதளத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. ஆனால் இதில் இன்னும் சில தேர்வு செய்யப்பட்ட தேர்வலர்கள் தங்களை சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யாமல் உள்ளனர். அதனால் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் தேர்வு முடிவுகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் சான்றிதழ் பதிவேற்ற செய்யப்படாத நபர்கள் தங்களின் சான்றிதழை நேரில் வந்தும் சமர்ப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மேலும் இதற்காக இன்றும், நாளையும் மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.