கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் கடந்த 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் சித்தி இத்தானி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகியிருந்த இந்த படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக பட குழு கேக் வெட்டி கொண்டாடி அதன் பின் செய்தியாளர்களை சந்தித்துள்ளனர். இந்த விழாவில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் சிம்பு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உள்ளிட்ட படக்குழு பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
அப்பொழுது பேசிய சிம்பு இந்த படம் எக்ஸ்ப்ளைன் மெண்டல் ஆன படம் ரெகுலராக கமர்சியல் படங்களின் ஹீரோவோட பில்டப் சாங்ஸ் பர்பாமென்ஸ் எதுவுமே இந்த படத்தில் இல்லை. மேலும் தமிழில் இந்த மாதிரி ஒரு படம் ட்ரை பண்ணலாம்னு கௌதமன் சார் சொன்னாரு அது எனக்கு ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருந்தது. இன்று அதனுடைய ரெஸ்பான்ஸ் ரிலீஸ் அப்புறம் பார்க்கும் பொழுது உண்மையிலேயே ரொம்ப சந்தோஷமா இருக்கு இதை உண்மையிலேயே கொண்டு போய் சேர்த்தது நீங்கதான் உங்க எல்லாருக்கும் எனது நன்றி. இந்த படம் நல்லபடியா ரிலீஸ் ஆச்சு ஏன் இந்த சந்தோஷம் என்றால் நான் அவ்வளவு பெரிய வலியை பார்த்திருக்கேன் நீங்க எல்லாருமே என் கூட இருந்து பார்த்து இருக்கீங்க சினிமாவில் ஹீரோ டோட்டலா காலியாகி தெருவுக்கே வந்துருவாரு அதுக்கப்புறம் ஒரு காயினை தூக்கிப்போட்டு அப்புறம் மெதுவா மேல வர மாதிரி உண்மையிலேயே லைப்ல நடப்பது ரொம்ப வித்தியாசமா இருக்கிறது.
மேலும் இந்த படத்தில் என்னை பாராட்டி எழுதுறாங்க இந்த படத்தில் என்னுடைய உடம்பை வைத்து உங்களால ஒண்ணுமே எழுத முடியல எப்பவுமே சில பேர் என்னுடைய உடம்ப வச்சு தப்பா எழுதுவாங்க ஒரு படத்தை விமர்சனம் பண்ணலாம் தனி நபருடைய உடம்பை வைத்து விமர்சனம் பண்ணுவது ரொம்ப தப்பு ரொம்ப வேண்டி கேட்டுக்கொள்கிறேன். தனிப்பட்ட வாழ்க்கையை உடம்பை வச்சி எழுதி யாரையும் கஷ்டப்படுத்தாதீங்க நன்றி என கூறியுள்ளார்.