Categories
அரசியல் மாநில செய்திகள்

சாகுற வரை கலைஞர் தான்…! அமெரிக்காவில் 300 ஏக்கர் இடம்… நெகிழ்ந்து போன நெப்போலியன் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் நெப்போலியன், நான் பிறந்து வளர்ந்தது விவசாய குடும்பம். எனக்கு ரொம்ப நாளா ஆசையாக அமெரிக்காவுக்கு சென்று 12 ஆண்டு காலம் ஆகிவிட்டது. இருந்தாலும் அங்கு போய் நான் விவசாயம் பண்ணனும்னு ரொம்ப ஆசை. அதற்கு உண்டான இடம் அமையவே இல்லை. கடந்தாண்டு ஒரு 300 ஏக்கர்ல நிலம் வாங்கினேன். அதுல விவசாயம் தொடங்கி இருக்கேன். அங்க 200  ஏக்கர்ல புல்லு போட்டு இருக்கோம். இங்கு எல்லாம் 3போகம் நெல்லு விதைக்கிற மாதிரி,  அங்க புல்லு போட்டு இருக்கோம்.

புல்லு ஆட்டமேட்டிக்கா வளரும். ரெண்டே பேர்தான் வராங்க,  எல்லாமே மெஷினரிஸ் தான். அவுங்களே வந்து புல்லை வெட்டுறாங்க,  காய வைக்கிறாங்க. ஒன்னு சேக்குறாங்க. அப்படியே ரோல் பண்ணுறாங்க, கொண்டு போயிருதாங்க. அங்க வந்து மேன் பவர்  ரொம்ப காஸ்லி, எல்லாமே மிஷினரிஸ் தான்.

அப்புறம் நம்ம வீட்டுக்கு தேவையான அவ்வளவு காய்கறிகளையும் நானே போட்டு இருக்கேன். தினம்  நானே போய் தண்ணி பாய்ச்சுவதில் இருந்து,  எல்லாமே நான் தான் பண்ணுவேன். வீட்டுக்கு தேவையான அவ்வளவு காய்கறிகளையும் வெளியே வாங்குவதில்லை. இப்போ நாலு மாத காலம் எல்லாமே நம்ம தோட்டத்தில் இருந்து தான் வந்துகிட்டு இருக்கு.

நான் அரசியலிலே இல்லையே. அரசியலை விட்டு விலகி ஏழு வருடம் ஆகிவிட்டது . இனி அரசியலுக்கு வரவே மாட்டேன். ஏனென்றால் உலகத்திலே பெரிய தொகுதிக்கு எம்.எல்.ஏ ஆக இருந்து விட்டேன். எம்பியா இருந்துட்டேன், இந்தியாவுக்கே மந்திரியா இருந்துட்டேன்.

இப்போ குடும்ப சூழ்நிலை, என்னுடைய குழந்தை சூழ்நிலை, அமெரிக்காவில் இருந்து அவனுக்கு ட்ரீட்மென்ட் எடுத்துக்கணும். இன்னைக்கும் நான் சொல்கிறேன் நான் சாகுற வரைக்கும் எனக்கு அரசியல் குரு கலைஞர் தான், சினிமா குரு பாரதிராஜா தான். அதில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்தார்.

Categories

Tech |