நடிகர் நெப்போலியன் நடத்திவரும் நிறுவனம் விழாவில் பங்கேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா காலத்தில் பெரிய இழப்பு ஏற்பட்டது. அமெரிக்காவில் நான் இருக்கிறதுனால, அந்த வேலை வாய்ப்பு ( கொரோனா இழப்பை தவிர்த்து) அப்படியே தக்க வச்சிக்க முடிஞ்சிச்சு. எங்களுடைய கிளைண்ட்டை நேரில் போய் பார்த்து, கொரோனாவால் நிறைய வேலை வாய்ப்பு பாதிக்குது, பட் எங்களுக்கு எங்க கம்பெனியிலிருந்து எந்த வேலை வாய்ப்பையும் நீங்கள் குறைத்து விடாதீர்கள் அப்படின்னு நான் அவர்களிடம் வேண்டுகோள் வைத்தேன்.
அதனால் அவர்கள் எங்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பு கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். கொரோனா காலத்திலேயும் இந்த சாப்ட்வேர் பொருத்தவரை எந்த ஒரு குறைபாடும் இல்லாமல் அப்படியே போச்சு அப்போ. முட்டுக்காட்டில் உள்ள நிறுவனத்துக்கு 40 கோடி ரூபாய் சங்சன் ஆச்சு. அது வந்து வேற மாநிலத்திற்கு போறதா இருந்தது. அத நா சண்டை போட்டு, எங்க மாநிலத்துக்கு தான் கொண்டு வரணும் அப்படின்னு, பிடிவாதம் பிடிச்சு கொண்டு வந்து, அதை அமைச்சேன்.
அது நல்லபடியா இருக்கு. நான் வரும்போது அதை பார்த்தேன். நம்ம ஆரம்பிச்சது நல்லபடியா போயிட்டு இருக்கு, அப்படின்னு நினைக்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு. உலகத்துலயே பெரிய தொகுதிக்கு எம்.எல். ஏ. வாக இருந்துட்டென், எம்.பி. யா. இருந்துட்டேன், இந்தியாவுக்கே மந்திரியா இருந்துட்டேன். இப்போ குடும்ப சூழ்நிலை, என்னோட குழந்தை சூழ்நிலை எனவே மக்கள் பணியாற்ற முடியல என தெரிவித்தார்.