செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மயில்சாமி, ஒரு மேடையில் பேசுறதும், இந்த மாதிரி பேசுறதும் வித்தியாசம் இருக்கு. ஒரு மேடையில் பேசினால் அது 100 பேருக்கு தெரியும், இப்படி பேசினா அது உலகத்துக்கே தெரியும். நான் இங்க ஒரு அற்புதமான நிகழ்ச்சிக்கு வந்து இருக்கேன். மனமே குரு, ஜீவனே கடவுள் அதையும் சொல்லிட்டு, மனதருமம் அப்படின்னா.. மத்தவங்களுக்கு உதவி பண்றது. ஜாதி மதம் எல்லாம் கிடையாது. அத பத்தி தான் தெளிவா பேசி இருக்கேன்.
ஒரு மனிதன் எப்படி இருக்கணும் ? அப்படின்னு இந்த புத்தகத்தில் இருப்பதாக என்னுடைய மனைவி சொன்னால், அத பத்தி பேசி இருக்கேன். நான் வணங்கும் அண்ணாமலையான், நான் வணங்கும் எம்.ஜி.ஆர் பற்றி பேசி இருக்கிறேன். பொதுவாவே ஒரு ஒரு மேடையில் பேசும்போதும் ஒரு கூட்டத்தை பார்க்கும் போதும் வேறு வேறு கேரக்டர்ல இருக்கும்.
ஆனா எனக்கு தெரிஞ்சு நான் 5000 மேடையில் ஏறி பேசி இருக்கேன். ஒரே மாதிரியாய் இருந்த கூட்டம், இந்த வள்ளலார் கூட்டம் மட்டுமே. கருணை முகம் மட்டுமே. இவர்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள். ஒன்றே குலம், ஒருவனே தேவன். ஜாதி, மதம், வேதம் எதுவுமே பார்க்காமல் மக்களுக்கு தர்மம் பண்ணுவதே எண்ணமாக கொண்டிருக்கும் இந்த கூட்டத்திற்கு நான் வந்தது, மிக்க மகிழ்ச்சி. இந்த மேடையில் இஸ்லாமிய சகோதரர்கள் வந்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு. அதுக்கு தானே சொன்னேன், ஒன்றே குலம், ஒருவனே தேவன். அதனை எப்படி பார்க்கிறது இல்லை என தெரிவித்தார்.