Categories
தேசிய செய்திகள்

இன்ஸ்டாகிராமில் தொழில்நுட்ப கோளாறா?…. கண்டுபிடித்த இந்திய மாணவனுக்கு ரூ.38 லட்சம் பரிசு…. மெட்டா நிறுவனம் அசத்தல்….!!!!

பிரபலமான சமூக வலைத்தளங்களில் இன்ஸ்டாகிராமும் ஒன்று. பிறருக்கு குறுஞ்செய்திகளை அனுப்புவது தொடங்கி இதில் கணக்கு வைத்திருக்கும் பயனர்கள் மீம்ஸ், பொழுதுபோக்கு வீடியோக்கள், ரில்ஸ் போன்ற பலவற்றையும் காணலாம். பல அம்சங்களை உள்ளடக்கியது என்பதால் இன்ஸ்டாகிராமில் தொழில்நுட்ப கோளாறுகள் இருக்கும். அதன் பிறகு அதற்கு ஏற்ற வகையில் அப்டேட்களும் வெளியாகும். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் உள்ள ஒரு தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடித்து இந்திய மாணவனுக்கு மெட்டாநிறுவனம் ரூ.38 லட்சம் பரிசு தொகையை வழங்கி உள்ளது.

ஜெய்ப்பூரை சேர்ந்த மாணவன் நிரஜ் சர்மா. இவர் பயனர்களின் இன்ஸ்டாகிராம் ரீல்ஸின் தம்ப்நெயில்- ஐ ஒருவரது ஐடி மற்றும் கடவுச்சொல் இல்லாமல் யார் வேண்டுமானாலும் மாற்றலாம் என இருந்த தொழில்நுட்பக் கோளாறு கண்டுபிடித்துள்ளார். இது குறித்து அவர் இன்ஸ்டாகிராம் நிறுவனத்திற்கு கடந்த ஜனவரி மாதம் இமெயில் அனுப்பி உள்ளார். அதன் பிறகு கடந்த மே மாதம் அவரது அறிக்கையை ஏற்றுக் கொண்ட மெட்டா நிறுவனம் அவருக்கு 45 ஆயிரம் அமெரிக்க டாலர் வெகுமதி அளிப்பதாக தெரிவித்துள்ளனர். அதாவது இந்திய மதிப்பில் ரூ.35 லட்சமாகும். அதன் பிறகு வெகுமதி வழங்குவதில் நான்கு மாதங்கள் ஏற்பட்ட தாமதத்திற்கு கூடுதலாக 4500 டாலர்களை (ரூ.3 லட்சம்) மெட்டா நிறுவனம் போனஸாக நிரஜ் சர்மாவிற்கு வழங்கி உள்ளது.

Categories

Tech |