Categories
தேசிய செய்திகள்

ரயில்வே நிலையங்களில் இலவச வைஃபை வசதியை நிறுத்திக் கொள்வதாக கூகுள் அறிவிப்பு!

இந்தியாவில் 400 ரயில்வே நிலையங்களில் அளிக்கப்பட்டு வந்த இலவச வைஃபை வசதியை நிறுத்திக் கொள்வதாக பிரபல கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

ரயிலில் பயணியர் வருகையை அதிகரிப்பதற்காக இந்தியா முழுவதும் கூகுள் நிறுவன உதவியுடன் ரயில் நிலையங்களில் இணையதள வசதிக்காக இலவச வை – பை வசதி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த வசதியை 30 நிமிடங்கள் இலவசமாக பயன்படுத்தி ‘இ – மெயில்’ பார்க்கலாம், ரயில் போக்குவரத்து பற்றிய தகவல்களையும் அறிந்து கொள்ளலாம்.

இந்த சேவை பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ரயில் நிலையத்தில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டு அடுத்த சில தினங்களில் கோடிக்கணக்கானோர் அதை பயன்படுத்தி பயண் அடைந்திருந்தனர். இந்த வைபை வசதியானது முதன்முதலில் மும்பை மத்திய ரயில் நிலையத்தில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர் சுமார் 400 ரயில்நிலையங்களில் படிப்படியாக கூகுள் நிறுவனம் சேவைகளை விரிவுபடுத்தியது.

இந்நிலையில் கூகுள் நிறுவனம் தனது வைபை சேவையை நிறுத்தி கொள்வதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அதன் துணைத் தலைவர் சீசர் குப்தா, உலகிலேயே அதிகம் இணையம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா டாப் இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் குறைந்த விலையில் இணைய சேவை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் மொபைல் போன் மூலம் எளிதில் தினசரி ஜிபி கணக்கில் இணையத்தை பயன்படுத்தும் முறை இந்தியாவில் பெரும்பாலானோர் பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.னவே தற்போது இந்தியாவில் 400 ரயில்வே நிலையங்களில் அளிக்கப்பட்டு வந்த இலவச வைஃபை வசதியை நிறுத்திக் கொள்ள உள்ளோம். இந்தியாவில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து வேறு சில நாடுகளிலும் இலவச வைஃபை அளித்து வந்தோம். தற்போது அத்தனையும் படிப்படியாக நிறுத்திக் கொள்ள உள்ளோம் என கூறியுள்ளார்.

Categories

Tech |