Categories
தேசிய செய்திகள்

பாஜகவில் இணைய விரும்புகிறீர்களா?…. நான் என் காரை கடனாக தருகிறேன்….. காங்கிரஸ் தலைவர் கமல்நாத் ஆவேசம்….!!!!

மத்திய பிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

மத்திய பிரதேசத்தின் காங்கிரஸ் தலைவரான  கமல்நாத் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது காங்கிரஸ் கட்சி அழிந்துவிட்டது என நினைக்காதீர்கள். மேலும் சிலர் காங்கிரசில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைய விரும்புகிறார்கள். அவர்கள் தாராளமாக செல்லலாம். அவர்களை யாரும் தடுக்க மாட்டார்கள். அப்படி செல்பவர்களுக்கு பாஜகவில் நல்ல எதிர்காலம் இருக்கும் என்றால் அவர்கள் பாஜகவில் சென்று இணைய நானே எனது காரை கடனாக கொடுக்கிறேன்.

இந்நிலையில் யாரையும் சமாதானப்படுத்தி  கட்சியில் தொடர வைப்பது முடியாதது. ஏனென்றால் காங்கிரசில் அனைவரும் அர்ப்பணிப்புடன் வேலை செய்கிறார்கள் . யார் மீது எந்த அழுத்தங்களையும் திணிப்பதில்லை. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை குனோ தேசிய பூங்காவிற்கு சிங்கப்புலிகள் கொண்டுவரப்பட்டது. இது குஜராத்தின் கிர்  காடுகளில் இருந்து குனோ  தேசிய பூங்காவிற்கு சிங்கங்களை மாற்றுவதற்கு மறுப்பு தெரிவித்த விவகாரத்தில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவே சிங்க புலிகள் தற்போது கொண்டுவரப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |