Categories
உலக செய்திகள்

“இது நல்ல யோசனை அல்ல”…ரஷ்யர்களின் விசா கட்டுப்பாடுகள் பற்றி ஐநா பொதுச் செயலாளர் பேச்சு…!!!!!

ரஷ்யா மீது விசா தொடர்பான கட்டுப்பாடுகளை முன் வைப்பது நல்ல யோசனை அல்ல எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டெரெஸ் கூறியுள்ளார். உக்ரைனில் ரஷ்ய ஆதரவாளர் அதிகம் இருக்கும் பகுதிகளை விடுவிப்பதாக கூறி கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி ரஷ்யா உக்ரைன் மீது போர் தாக்குதலை அறிவித்துள்ளது. இந்த மோதல்கள் கடந்த ஏழு மாதங்களை தாண்டியும் தாக்குதல்கள் நிறுத்தப்படாமல் சண்டை இன்றும் தொடர்ந்து வருகின்றது. இந்த நிலையில் ரஷ்யாவின் இத்தகைய அத்துமீறிய செயலுக்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து பல அடுக்கு பொருளாதார தடைகளை விரித்து வருகின்றது. மேலும் ரஷ்யாவின் அண்டை நாடுகள் ரஷ்யா ஆக்கிரமிப்பாளர்கள் யாரும் தங்கள் நாட்டிற்கு வருவதை தடுக்கும் விதமாக லிதுவேனியா மற்றும் போலந்து போன்ற நாடுகள் ரஷ்யர்களுக்கான விசாவில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

இந்த சூழலில் ரஷ்யா மீது விசா தொடர்பான கட்டுப்பாடுகளை முன் வைப்பது நல்ல யோசனை அல்ல எனவும் திங்கள்கிழமை அன்று RIA நோவோஸ்டிக்கு அளித்த பேட்டியில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் அனைத்து ரஷ்ய மக்களும் போரை விரும்பவில்லை எனவும் பல மக்கள் போரின் வெளிச்சத்தில் நாட்டை விட்டு வெளியேற விருப்பம் தெரிவிப்பததாகவும் எனவே அவர்கள் வருவதை தடுப்பது நல்ல யோசனை அல்ல எனவும் தெரிவித்துள்ளார். மேலும் போர் முடிவடைந்த பின் தற்போதைய கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என நம்புவதாக ஐநா பொதுச் செயலாளர் கூறியுள்ளார்.

Categories

Tech |