ஐ.நா. பொது சபையில் நடைபெறும் கூட்டத்தில் வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொள்கிறார்.
நாளை ஐ.நா. பொது சபையில் ஒரு வார கால கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மந்திரி ஜெய்சங்கர் தலைமையிலான இந்திய உயர்நிலைக் குழு கலந்து கொள்கிறது. மேலும் வருகின்ற 24-ஆம் தேதி நடைபெறும் சிறப்பு கூட்டத்தில் 75-வது ஆண்டு சுதந்திர பெருவிழாவை இந்தியா கொண்டாடி வரும் நிலையில் ஐ.நா.வுக்கும்-இந்தியாவுக்கும் இடையேயான நல்லுறவு குறித்து மந்திரி ஜெய்சங்கர் உரையாற்றுகிறார்.
மேலும் ஜி 20, ஐ.நா பாதுகாப்பு உறுப்பு நாடுகளில் வெளியுறவுத்துறை மந்திரியுடனும் இருதரப்பு உறவுகள் பற்றி பேசுகிறார். இதனையடுத்து வருகின்ற 25-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரியான ஆண்டனி பிளிங்டன் மற்றும் உயர் அதிகாரிகளுடன் இரு நாடுகளின் உறவு குறித்து பேச இருக்கிறார். மேலும் நடைபெறும் அமைப்பு நாடுகளின் கூட்டங்களிலும், சிறிய நாடுகளும், ஐநா பாதுகாப்புக்குழுவில் உறுப்பினர்களாக சேர்வதற்கு உரிய சீர்திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பாக நடைபெறும் கூட்டத்திலும் இவர் கலந்து கொள்கிறார்.