Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு சென்ற மாணவி மாயம்…. தந்தை அளித்த புகார்…. வலைவீசி தேடும் போலீஸ்….!!

பள்ளிக்கு சென்ற பிளஸ்-1 மாணவியை கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வள்ளியூர் பகுதியில் தொழிலாளி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு பிளஸ்-1 படிக்கும் 16 வயது மகள் இருந்துள்ளார். அப்போது மாணவியும் அதே பகுதியில் வசிக்கும் வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த தொழிலாளி மகளின் படிப்பை நிறுத்திவிட்டு திருச்செந்தூர் பகுதியில் உள்ள அரசு விடுதியில் சேர்த்துள்ளார். அங்கிருந்து மாணவி ஒரு பள்ளியில் படித்து வந்துள்ளார். கடந்த 16-ஆம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி திடீரென மாயமானார்.

இதனை அறிந்த அவரது தந்தை அங்குள்ள மாணவர்களிடம் இதுகுறித்து கேட்டபோது வள்ளியூரில் வசிக்கும் வாலிபர் ஒருவர் மாணவியை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து மாணவியின் தந்தை திருச்செந்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |