தேமுதிக தொண்டர்களிடம் பேசிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா, நான் இன்னைக்கு சவால் விடுகிறேன். ஓட்டுக்கு காசு கொடுக்காமல், கூட்டணி அமைக்காமல், இன்னைக்கு தமிழ்நாட்டுல இருக்கின்ற அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிடுங்கள். நாங்களும் தனித்துப் போட்டியிடுகிறோம். யாருக்கும் ஒரு ரூபாய் கூட ஓட்டுக்கு காசு கொடுக்காமல் தேர்தலில் போட்டியிட தைரியம் இருக்கா ? சவால் விடுகிறேன். இதற்கு பதில் சொல்லுங்கள் பார்ப்போம்.
இவங்க ( திமுக) வந்தா உடனே ஏடிஎம்கே மந்திரி வீட்டுக்கு ரைடு அனுப்பனும். ஊழல் பண்ணி இருக்காரு, அதை பண்ணி இருக்காரு, இதை பண்ணி இருக்காருன்னு சொல்லுறீங்க. அப்போ உங்க மந்திரிகள் எல்லாரும் யோக்கியர்களா ? உண்மையான ஆட்சியாக இருந்தால்… உண்மையான மக்களுக்கான ஆட்சியாக இருந்தால்… திரு ஸ்டாலின் அவர்களே AM, PM முதல்வராக நான் இருக்க விரும்பவில்லை, M M மக்கள் முதல்வராக இருக்க விரும்புகிறேன் என்று சொல்லுகிறீர்களே…
உண்மையில் மக்கள் முதல்வராக நீங்கள் இருக்க வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால், முதலில் ரெய்டை உங்கள் மந்திரிகள் வீட்டிற்கு அனுப்ப தயாராக இருக்கிறீர்களா ? என்பதை நான் இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன். ஆடிட்டரை வச்சு மாச கணக்கில் எவ்வளவு வருவாய் வந்திருக்கு, ஒவ்வொரு மந்திரி வீட்டுக்கு என்று கணக்கு பார்த்துகிட்டு இருக்கீங்க. நீங்களா மக்கள் முதல்வர், மக்கள் சார்பாக இந்த கேள்வியை நான் உங்களுக்கு கேட்கிறேன் என தெரிவித்தார்.