Categories
மாநில செய்திகள்

B.E முதல் சுற்று மாணவர்களுக்கு…. செப்டம்பர் 22 கடைசி நாள்….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

B.Eசேர்க்கை கலந்தாய்வின் முதல் சுற்றில் இடங்களை தேர்வு செய்த மாணவர்கள் செப்டம்பர் 22ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேர அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான முதல் சுற்று கலந்தாய்வு கடந்த பத்தாம் தேதி தொடங்கி 15ஆம் தேதி முடிந்தது. தற்காலிக ஒதுக்கீடு கடிதம் மாணவர்கள் அனைவருக்கும் இணைய வழியில் வழங்கப்பட்டது.கல்லூரிகளை இறுதி செய்து வழங்கப்பட்ட இந்த கடிதத்தை ஏழு வேலை நாட்களுக்குள் கல்லூரிகளுக்கு கொண்டு சென்று வழங்கி மாணவர்கள் சேர வேண்டும் என்ற புதிய நடைமுறை இந்த ஆண்டு முதல் கொண்டுவரப்பட்டுள்ளது.

அவ்வாறு மாணவர்கள் கடைசி வரை சேராமல் இருந்தால் அந்த இடங்கள் காலியிடங்களாக ஒதுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.அவ்வகையில் முதல் சுற்றில் இடம் பெற்ற மாணவர்கள் வருகின்ற செப்டம்பர் 22ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர்வதற்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.எனவே கல்லூரிகளில் சேர்வதற்கு இறுதி ஒதுக்கீடு கடிதம் பெற்ற மாணவர்கள் அனைவரும் கல்லூரிகள் அல்லது மையங்களில் செயற்கை கடிதத்தை கொடுத்து கட்டணம் செலுத்தி சேர வேண்டும் என்றும் சேராதவர்களின் இடம் காலியிடங்களாக கருதப்படும் எனவும் உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Categories

Tech |