தமிழகத்தில் அண்மையில் மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்தது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்நிலையில் மின் கட்டண உயர்வைத் தொடர்ந்து மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களுக்கான மின் கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி காலை 5 மணி முதல் 10 மணி வரை சார்ஜிங் செய்ய ஒரு யூனிட்டுக்கு 10 ரூபாயும், காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை ஒரு யூனிட்டுக்கு எட்டு ரூபாயும், இரண்டு மணி முதல் மாலை 6 மணி வரை பத்து ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதன் பிறகு மாலை 6:00 மணி முதல் இரவு 11 மணி வரை 12 ரூபாயும்,இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஒரு யூனிட்டுக்கு எட்டு ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மின்சார வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.