Categories
தேசிய செய்திகள்

கர்நாடகா: பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதை போதனைகள்?…. பள்ளிக்கல்வித்துறை மந்திரி வெளியிட்ட தகவல்….!!!!

கர்நாடக மாநில மேல் சபையில் பா.ஜனதா உறுப்பினர் பிரானேஷ் கேட்ட கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் பதில் அளித்தார்.  அதாவது “அம்மாநிலத்தில் இப்போதுள்ள பள்ளிப் பாடத்திட்டத்தின் கீழ் பகவத் கீதை போதனைகளானது சேர்க்கப்படாது. அதுபோன்ற எண்ணம் அரசுக்கு கிடையாது. எனினும் வரும் டிசம்பர் மாதம் முதல் இந்த பாடத் திட்டத்தில் தார்மீக பாடத்தை சேர்க்க திட்டமிட்டு இருக்கிறோம். அத்துடன் அப்பாடத்தில் பகவத் கீதையின் போதனைகள் இணைத்து குழந்தைகளுக்கு கற்று கொடுக்கப்படும்.

இது தொடர்பாக அரசுக்கு பரிந்துரை செய்ய ஒரு குழு அமைத்திருக்கிறோம். ஆகவே அந்தகுழு வழங்குக்கூடிய அறிக்கையின்படி பகவத் கீதை சேர்க்கப்படும். பாபாபுடன்கிரி மலை பற்றி பாடத் திட்டத்தில் இடம்பெற்றுள்ள பாடத்தில் சில தவறுகள் உள்ளதாக உறுப்பினர் சுட்டிக் காட்டினார். முன்பே பாடப் புத்தகங்களில் இடம்பெற்ற தவறுகளை சரி செய்யும் பணியை மேற்கொண்டுள்ளோம். அதேபோன்று அந்த தவறும் சரிசெய்யப்படும்” என்று பி.சி.நாகேஸ் கூறினார்.

Categories

Tech |