அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக மிதிவண்டிகள் ஏதும் வழங்கப்படவில்லை. இதனைத்தொடர்ந்து நடப்பு கல்வி ஆண்டில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீலகிரியில் நடப்பாண்டு வழங்கப்பட்ட சைக்கிள்களை மாணவ மாணவிகள் வாங்கிய அன்றே விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து பேசிய மாணவர்கள், “மலைப்பகுதியான ஊட்டியில் சைக்கிள்களை எல்லா இடத்திலும் பயன்படுத்த முடியாது. பள்ளிக்கு கூட கொண்டு செல்ல முடியாது. அதனால் தான் விற்பனை செய்கிறோம். 200, 300 ரூபாய்க்குத்தான் வாங்குகிறார்கள். சைக்கிள் பயன்படுத்த முடியாத பகுதிகளை சேர்ந்த மாணவர்களுக்கு மாற்று திட்டத்தை அறிமுகப்படுத்தினால் நன்றாக இருக்கும்” என கூறியுள்ளனர்.