உத்திரபிரதேச மாநிலம் சந்த் கபீர் நகர் பகுதியில் ராம்பூர் கிராமத்தில் உள்ள ஒரு மரத்தில் நேற்று மாலை இளம் காதலர்கள் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 18 வயதான ஆண் மற்றும் 15 வயதான பெண் இருவரும் காதலித்து வந்ததாகவும், இவர்களது சாவில் மர்மம் இருப்பதாகாவும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று இருவரின் குடும்பத்தினரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் அவர்கள் பயன்படுத்திய செல்போன்களை சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. இவர்களின் உடல் உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் தெரிய வந்ததும் இது கொலையா? தற்கொலையா? என்பது உறுதி செய்யப்படும் என்று காவல்துறையினில் தெரிவித்துள்ளனர்.