தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குழந்தைகளுகிடையே வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. அதிலும் பள்ளி செல்லும் குழந்தைகளிடையே இந்த வைரஸ் காய்ச்சல் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ப்ளூ காச்சல் காரணமாக 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் பல தரப்பினரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து தமிழக பாஜக தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்ப்ளூயன்சா வைரஸ் பரவல் தமிழகத்தில் குறிப்பாக சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் கலந்து சில நாட்களாக அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் மருத்துவமனையில் காய்ச்சலுடன் சிகிச்சைக்காக வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.
அதனைத் தொடர்ந்து இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பாதிப்பினால் மக்கள் மிகவும் அதிகமாக பாதிக்கப்படாத வகையில், உடனடியாக மருத்துவ உதவிகள் கிடைக்க மாநில அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்கு மருத்துவ உதவிகள் கிடைத்திட பாஜக சார்பில் அரசுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் நாங்கள் தயாராக இருக்கிறோம். இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பரவல் குறையும் வரை பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் ஆக்க வேண்டும். பள்ளிக்கல்வித்துறை மற்றும் அரசு மருத்துவர்களின் உதவியோடு மாணவர்கள் எண்ணிக்கை அதிகம் உள்ள பள்ளிகளில் மருத்துவ முகாம் நடத்துவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். நோய் பரவலை தடுப்பதற்கு மக்களும் அரசும் இணைந்து செயல்பட முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இது குறித்து மத்திய சுகாதார மந்திரி மன்சுக்கு மாண்டாவியாற்கு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தமிழகத்தில் இன்ஃப்ளூயன்சா வைரஸ் பாதிப்பு நிலைமையை கண்டறிய அவசர கால மீட்பு குழு ஒன்றே அனுப்பி மாநில அரசுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் உடனடியாக வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.