உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.தனது பயனர்களுக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி அண்மையில் தனது பயனர்கள் தனிப்பட்ட உரையாடல்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள புதிய ஆப்ஷன்களை அப்டேட் செய்தது.அதாவது குழு உரையாடல்களில் அனைவருக்கும் தெரிவிக்காமல் வெளியேறும் வகையிலும் நீங்கள் ஆன்லைனில் இருக்கும் போது யார் பார்க்கலாம் என்பதையும் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும்.
அது மட்டுமல்லாமல் வாட்ஸ் அப் குழுவில் 256 நபர்கள் மட்டுமே இணையலாம் இருந்த கட்டுப்பாடு தற்போது 512 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.இன்ஸ்டாகிராம் செயலியை போலவே whatsappலும் மெசேஜ்களுக்கு விரைவாக எமோஜிகள் மூலம் ரிப்ளை செய்யும் முறையும் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து உங்களின் மெசேஜ்களுக்கு டைமர் செட் செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி புதிய அப்டேட்டாக லேப்டாப் மற்றும் டெக்ஸ்டாப்பில் வாட்ஸ் அப்பை ஆஃப்லைன் முறையிலும் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த புதிய அப்டேட்டுகளுக்கு பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது நீங்கள் அனுப்பும் மெசேஜ்களை எடிட் செய்யும் வசதி edited விரைவில் வரவுள்ளதாகவும் வாட்ஸ் அப் நிறுவனம் அறிவித்துள்ளது.இந்த புதிய வசதியின் மூலமாக குறுஞ்செய்தியின் கீழ் எடிட்டர் என்ற ஆப்ஷன் உங்களுக்கு காட்டும்.