நமது தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் வாழும் நகர்ப்புற ஏழை குடும்பங்களுக்கு அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய வீட்டு வசதிகளை ஏற்படுத்துவதற்காக முன்னாள் முதல்வர் கருணாநிதியால் 1970-ஆம் ஆண்டு குடிசை மாற்று வாரியம் உருவாக்கப்பட்டது. பின்னர் கடந்த ஆண்டு தமிழ்நாடு நகர்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள், கட்டுமானங்களை ஆய்வு செய்ய நமது தமிழக அரசு அண்ணா பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில் வாரியத்தின் பழைய குடியிருப்புகள், புதிய கட்டுமானங்களை ஆய்வு செய்ய இணைந்து செயல்பட நமது தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும் கட்டுமான பொருட்கள், வேலையாட்களின் பணி, கட்டுமானம் ஆகியவற்றை தொடக்கத்தில் இருந்து ஆய்வுக்கு உட்படுத்த படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.