Categories
உலக செய்திகள்

கொந்தளிக்கும் கடல்…. சிக்கி தவிக்கும் படகு… உதவி செய்த டால்பின்கள்.!!

இங்கிலாந்து நாட்டில் கடல் கொந்தளிப்பில் சிக்கிய படகுக்கு டால்பின் மீன்கள் வழிகாட்டியாக வந்த வீடியோ வெளியாகியுள்ளது.

பொதுவாக ஆபத்தில் சிக்கினால் டால்பின் வந்து காப்பாற்றும் என்று நாம் கேள்விபட்டிருக்கிறோம். அப்படி உண்மையிலேயே காப்பாற்றுமா என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கிறது. அந்த சந்தேகத்தை போக்கும் வகையில் இங்கிலாந்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆம் அந்நாட்டில் கடந்த சில தினங்களாகவே டென்னிஸ் புயல் கோரத்தாண்டவம் ஆடி கடும் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கார்ன்வெல் கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகு புயலில் சிக்கிகொண்டது.

கடல் கொந்தளித்ததால், அந்தப் படகு கரைக்குத் திரும்பி கொண்டிருந்தபோது, அதற்கு முன்னதாகவே சில டால்பின் மீன்கள் படகின் வேகத்தை விடவும் அதிவேகமாக முன்னேறிச் சென்று, படகின் முன் சென்று, அதற்கு வழிகாட்டியாக வந்தன. டால்பின்களின் இந்தச் செயல்களை கண்டு வியந்து அந்த படகின் முன்பாகச் சென்ற மற்றொரு படகில் சென்றவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |