பாதுகாப்பான மற்றும் நிலையான லாபத்தை பெற விரும்புவோருக்கு, அஞ்சலகத்திட்டம் மிகவும் சிறந்தது ஆகும். இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடுசெய்தால் மாதந்தோறும் நிலைஆன ஒரு வருமானத்தை பெறலாம். இத்திட்டத்தை பெரியவர்கள் மட்டுமின்றி 10 (அல்லது) 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் பெயரில் திறக்கலாம் . உங்களது குழந்தைகளின் பெயரில் இந்த அஞ்சல் அலுவலக மாத வருமானத்திட்டம் என்னும் சிறப்புக் கணக்கை துவங்கினால், அவருடைய பள்ளிக்கட்டணத்தைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.
இத்திட்டம் குறித்த அனைத்து விவரங்களையும் அறிந்துகொள்ளலாம். இக்கணக்கை (Post Office Monthly Income Scheme Benefits) எந்த தபால் நிலையத்திலும் திறக்கலாம். இதன்கீழ் குறைந்தபட்சமாக ரூபாய்.1000 முதல் அதிகபட்சம் ரூபாய்.4.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இப்போது இத்திட்டத்தின் கீழ் வட்டி விகிதம் 6.6 சதவீதம் ஆக இருக்கிறது. குழந்தையின் வயது 10 வயதுக்கு மேல் இருப்பின், அவருடைய பெயரில் இந்தக் கணக்கை திறக்கலாம். குழந்தையின் வயது 10 வயதுக்கு குறைவாக இருந்தால், அதற்குப் பதில் பெற்றோர் இந்தக் கணக்கைத் திறக்கலாம். சிறந்த வருமானத்தை கொடுக்கும் இத்திட்டத்தின் முதிர்வு 5 வருடங்கள் ஆகும்.
உங்களது குழந்தைக்கு 10 வயதாகி நீங்கள் ரூபாய்.2 லட்சத்தை அவர் பெயரில் டெபாசிட்செய்தால், மாதந்தோறும் உங்களுக்கு கிடைக்கும் வட்டி தற்போதைய 6.6 சதவீதத்தில் ரூபாய்.1100 என்ற அளவில் இருக்கும். அதன்படி 5 வருடங்களில் உங்களுக்கு கிடைக்கும் வட்டி மொத்தம் 66 ஆயிரம் ரூபாயாக இருக்கும். அத்துடன் நீங்கள் முதலீடு செய்த 2 லட்சம் ரூபாய் திரும்பக்கிடைக்கும். இதன் வாயிலாக உங்கள் குழந்தைக்கு 1100 ரூபாய் கிடைக்கும்.
அதனை நீங்கள் அவரது கல்விக்கு பயன்படுத்தலாம். இத்தொகை பெற்றோருக்கு பெரிதும் உதவியாக இருக்கும். இதேபோன்று 4.5 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால், மாதந்தோறும் சுமார் 2500 ரூபாய் கிடைக்கும். அத்துடன் இந்த கணக்கை வயது வந்த ஒருவர் (அல்லது) 3 நபர்கள் இணைந்து கூட்டாகவும் தொடங்கலாம். இந்தக் கணக்கில் ரூபாய்.3.50 லட்சம் டெபாசிட் செய்தால், தற்போதைய விகிதத்தில் மாதந்தோறும் ரூ.1925 கிடைக்கும்.