Categories
சினிமா

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கதாநாயகனாக ராமராஜன்….. என்ன படம் தெரியுமா?…. குஷியில் ரசிகர்கள்…..!!!!

தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் கிராமத்து படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ராமராஜன். இவன் நடித்த பல படங்கள் விமர்சன ரீதியாகவும், வருமான ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. எங்க ஊரு பாட்டுக்காரன், எங்க ஊரு காவல்காரன், என்ன பெத்த ராசா, கரகாட்டக்காரன், பாட்டுக்கு நான் அடிமை போன்ற படங்கள் இன்று வரை ரசிகர்களால் கொண்டாட கூடிய படங்களாக பார்க்கப்பட்டு வருகிறது. இவரின் நடிப்பில் கடைசியாக 2012 ஆம் ஆண்டு மேதை என்ற படம் வெளியானது. அதன் பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார்.

இருப்பினும் அவ்வப்போது ராமராஜன் மீண்டும் நடிக்க வருவதாக தகவல்கள் வெளியாகி கொண்டே இருந்தது. இந்நிலையில் அவர் மீண்டும் சினிமாவில் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. ராகேஷ் இயக்கம் ‘சாமானியம்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் தனது 2 வது இன்னிங்ஸை செய்ய ராமராஜன் தொடங்குகிறார். இது ராமராஜனுக்கு 45 வது படமாகும். இந்த படத்தில் ராதாரவி, எம்.எஸ். பாஸ்கர் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். மேலும் ராமராஜன் மீண்டும் கதாநாயகனாக நடிக்க வருவது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

Categories

Tech |