Categories
மாநில செய்திகள்

“முதல்வர் கொடுத்த வீட்டு மனை பட்டா செல்லாது” அதிர்ச்சியில் நரிக்குறவர் மக்கள்…. கலெக்டரிடம் முறையீடு….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அருகே கெலவரப்பள்ளி ஊராட்சி அமைந்துள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் 72 நரிக்குறவர் இன மக்களுக்கு கடந்த 2000-ம் ஆண்டு இலவச வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டது. இந்த வீட்டு மனை பட்டா கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் 2002-ம் ஆண்டு வரை சென்னை மேயராக இருந்த ஸ்டாலின் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது. இந்த வீட்டு மனை பட்டா வழங்கி 20 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது அதிகாரிகள் வீட்டுமனை பட்டா செல்லாது என்று கூறுவது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் நரிக்குறவர் இன மக்கள் தொகுப்பு வீடுகள், புனரமைப்பு மற்றும் வங்கி கடன் என எந்த ஒரு உதவிகளையும் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நரிக்குறவர் இன மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் மேயராக இருந்த முதல்வர் ஸ்டாலினால் வழங்கப்பட்ட பட்டா செல்லாது என்றால் தற்போது முதல்வராக இருக்கும் ஸ்டாலின் அவர்களால் செல்ல தக்க பட்டா வழங்கிட நடவடிக்கை எடுக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |