Categories
மாநில செய்திகள்

நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்?….. இந்து மதம் குறித்து பேசிய எம்.பி. ஆ. ராசா…. மாநிலம் முழுவதும் அளிக்கப்பட்ட பல புகார்கள்….!!!!

எம்.பி. ஆ. ராசா தான் பேசியது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் உள்ள வேப்பேரி பகுதியில் கடந்த 6-ஆம்  தேதி ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தி.மு.க.  எம்.பியான  ஆ. ராசா கலந்து கொண்டு இந்து மதம் குறித்து பேசினார். இவர் பேசியது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. இதனால் இவர் மீது மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில்  புகார் அளிக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து அவர் விளக்கமளித்துள்ளார். அப்போது அவர் பேசியதாவது. நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார்கள் எல்லாரும். மன்னிப்பு கேட்பது என்பது பெரிய விசியம் இல்லை.

மன்னிப்பு கேட்பது என்பது மனித மான்பு. மேலும் நான் மன்னிப்பை கேட்க மாட்டேன் என்றால் அவனை விட முட்டாள் அயோக்கியன் வேறு யாரும் இல்லை. இதனையடுத்து நான் மன்னிப்பு கேட்க தயார் என்ன மணிப்புன்னு சொல்லுங்க நாங்கள் இந்து மதத்திற்கு எதிரானவர்கள் இல்லை இந்து மதத்தின் பெயரால் சொல்லப்படும் சனாதானத்திற்கு எதிரானவர்கள் என கூறியுள்ளார்.

Categories

Tech |