Categories
அரசியல்

திடீர் அரசியல் பயணமாக டெல்லி சென்ற இபிஎஸ்… ஓபிஎஸ் இன் ஆன்மீக பயணம்… அதிமுகவில் பெரும் பரபரப்பு…!!!!!!

அதிமுக இடைக்கால பொது செயலாளர் ஆக தேர்வு செய்யப்பட்டிருக்கிற எடப்பாடி பழனிசாமி திடீரென நேற்று இரவு 9 மணிக்கு விமானம் மூலமாக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் அவருடன் முன்னாள் அமைச்சர்கள் சி.வி சண்முகம், எஸ் பி வேலுமணி போன்றவரும் உடன் சென்றுள்ளனர். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டது தொடர்பான பொதுக்குழு தீர்மானங்களை ஏற்கனவே இந்திய தேர்தல் ஆணையத்தில் கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது அதிமுக அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமி இடம் வழங்கப்பட்டது தொடர்பான கோர்ட்டு தீர்ப்பு மற்றும் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்ற கோர்ட்டு தீர்ப்பையும் எடுத்துக்கூறி இந்திய தேர்தல் ஆணையத்திடம் எடப்பாடி பழனிசாமி நேரடியாக முறையிட்டு கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய இருப்பதாக கூறப்படுகின்றது.

மேலும் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தனது குடும்பத்தினருடன் மதுரை மற்றும் ராமேஸ்வரம் சென்றுள்ளார். அங்குள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்து அதன் பின் மதுரையில் இருந்து சென்னை வந்த ஓ பன்னீர்செல்வம் சென்னை விமான நிலையத்தில் தங்கியுள்ளார். இந்த நிலையில் பயணிகள் விமானத்தில் அவர் குடும்பத்துடன் சென்னையில் இருந்து வாரணாசி புறப்பட்டு சென்றுள்ளார். மேலும் அங்கு காஷ்மீர் விஸ்வநாதர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்திவிட்டு மீண்டும் சென்னை திரும்புவார் என கூறப்படுகின்றது.

Categories

Tech |