Categories
அரசியல்

“இவர்களுக்காக உங்கள் வாத திறமையை பயன்படுத்துங்கள்”… சட்ட மாணவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் பேச்சு…!!!!!!

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். சென்னை பெருங்குடியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழக இணை வேந்தரும் சட்டத்துறை அமைச்சருமான ரகுபதி, துணைவேந்தர் சந்தோஷ் குமார், உயர்நீதிமன்ற நீதிபதி ரமேஷ், முன்னாள் நீதிபதி கிருபாகரன் பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் போன்றோர் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில் பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா கல்வெட்டை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். அதன் பின் அவர் வெள்ளி விழா மலரையும் வெளியிட்டுள்ளார். இதனை அடுத்து நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் சிறப்புரையாற்றியுள்ளார். அப்போது பேசிய அவர் இந்தியாவில் சட்டப் பல்கலைக்கழகத்தை நிறுவிய முதல் மாநிலம் தமிழகம் தான். அரசு சட்டக் கல்லூரி மூலம் கிராமப்புற மாணவர்கள் எளிதாக சட்டம் பயின்று வருகின்றார்கள்.

கிரீன்வேஸ் சாலையில் தான் குடியேற இருந்த இல்லத்தை சட்ட பல்கலைக்கழகத்திற்காக கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி. மேலும் அனைவருக்கும் தரமான உயர்கல்வி வழங்க பல்வேறு சிறிய திட்டங்களை செயல் வடிவம் தந்து வருகின்றோம். இலவச பயண சீட்டு சலுகை மாணவியர்களுக்கு பெரும் உதவியாக இருக்கிறது. அரசு பள்ளி மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் உயர்கல்விக்காக செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. மேலும் சட்ட பல்கலைக்கழகம் மேலும் பல மாமேதைகளை உருவாக்க வேண்டும். சீர்மிகு சட்டப் பள்ளியில் பயின்று வருபவர்களில் 70 சதவிகிதம் பேர் மாணவிகள் 40 சதவிகிதம் மாணவர்களுடன் தொடங்கப்பட்ட சட்ட பல்கலைக்கழகத்தில் தற்போது 4500 க்கும் அதிகமானோர் பயின்று வருகின்றார்கள். சட்ட விதி மட்டுமல்லாமல் அரசியலமைப்பு வழங்கி இருக்கின்ற உரிமைகளையும் சமூக நீதியையும் காப்பாற்றும் விதமாக சட்ட பல்கலைக்கழக மாணவர்கள் செயல்பட வேண்டும். ஏழை எளிய மக்களின் அடிப்படை உரிமைகளை காக்கும் வழக்கறிஞராக சட்ட பல்கலைக்கழகம் மாணவர்கள் செயல்பட வேண்டும். மேலும் அவர்களின் வழக்குகளுக்காக தங்கள் வாத திறமையை வழக்கறிஞர் பயன்படுத்த வேண்டும் சட்டம் தாண்டி சமூகத்தையும் சட்ட மாணவர்கள் படிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |