Categories
மாநில செய்திகள்

ஓ இதுதான் காரணமா?…. தி.மு.க.வில் இருந்து விலகும் சுப்புலட்சுமி ஜெகதீசன்…. வெளியான அறிக்கை….!!!!

தி.மு.க. கட்சியின்  முன்னாள் தலைவர்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

1947-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24-ஆம் தேதி சுப்புலட்சுமி ஜெகதீசன் பிறந்தார். இவர் ஆளும் கட்சியில் மூத்த தலைவர்களில் ஒருவர் ஆவார். மேலும் திராவிட முன்னேற்ற கழகம் அரசியல் கட்சியின் உறுப்பினராக தமிழ்நாட்டின் திருச்செங்கோடு தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி இந்தியாவின் 14-வது மக்களவை உறுப்பினராக இருந்தார்.   இந்நிலையில்  இவர் தனது  பதவியை ராஜினாமா செய்து விட்டதாக இணையதளங்களில் தகவல்கள் வைரலாக பரவி வந்தது. அதேபோல் நேற்று   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்திலும் இவர் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில் அவர்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நான்  அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என விரும்புகிறேன். மேலும் நான் கடந்த 2009-ஆம் ஆண்டிற்கு பிறகு கட்சிப் பணிகளை மட்டுமே செய்து வந்தேன். என தெரிவித்துள்ளார். மேலும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி விளக்கம் கடிதம் அளித்து விட்டதாக  கூறியுள்ளார்.

Categories

Tech |