பிரிட்டன் மகாராணியாரின் இறுதி சடங்கில் இளவரசர் ஜார்ஜ் மற்றும் இளவரசி சார்லட் கலந்து கொண்ட நிலையில், இளவரசர் லூயிஸ் மட்டும் ஏன் கலந்து கொள்ளவில்லை? என்பதற்கான காரணம் தெரிய வந்திருக்கிறது.
பிரிட்டன் நாட்டை 70 வருட காலங்களாக ஆட்சி செய்து வந்த மகாராணியார் கடந்த ஒன்பதாம் தேதி என்று உடல்நல குறைவு காரணமாக மரணமடைந்தார். அவரின் இறுதிச் சடங்கு வெஸ்ட் மின்ஸ்டர் அவையில் நேற்று நடந்தது. இதில் ராஜ குடும்பத்தை சேர்ந்த நபர்களும், உலக தலைவர்களும் பங்கேற்றனர் .
இதில், வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் கேட் தம்பதியின் பிள்ளைகள் இளவரசர் ஜார்ஜும் இளவரசி சார்லட்டும் பங்கேற்றனர். எனினும் இவர்களின் இளைய சகோதரர் இளவரசர் லூயிஸ் இறுதி சடங்கில் கலந்து கொள்ளவில்லை. அதாவது இறுதிச் சடங்கிற்கு தங்கள் பிள்ளைகளை அழைத்து வருவது தொடர்பில் இளவரசர் வில்லியமும் இளவரசி கேட்டும் அதிகம் யோசித்ததாக தெரியவந்துள்ளது.
கடைசியாக இளவரசர் ஜார்ஜ் மற்றும் இளவரசி சார்லட் கடந்த வருடம் அவர்களின் தாத்தாவான இளவரசர் பிலிப்பின் இறுதி நினைவு விழாவில் பங்கேற்றதால், அவர்களை மட்டும் அழைத்து வர இளவரசர் சார்லஸ் முடிவெடுத்துள்ளார். இளவரசர் லூயிஸ் சிறிய குழந்தை என்பதால் அவரை அழைத்து வரவில்லை என்று தெரிய வந்திருக்கிறது.