Categories
சினிமா தமிழ் சினிமா

“தனி ஒருவன் 2” ஜெயம் ரவி சொன்ன குட் நியூஸ்… குஷியில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரான மணிரத்தினம் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக இயக்குகிறார். இதன் முதல் பாகம் தயாராகி வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இதை முன்னிட்டு சென்னையில் உள்ள தரமணியில் இயக்குனர் மணிரத்தினம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு மற்றும் ரகுமான், திரிஷா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது நடிகர் ஜெயம் ரவி கூறியதாவது, எனக்கு சுருட்டை முடி. இந்த படத்திற்காக நீளமாக முடி வளர்க்க வேண்டும் என்று கூறினார்கள். இனிமேல் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காது.

இதனால் ஸ்லோவ் மோஷனில் அதை வீடியோ எடுத்து வைத்திருக்கிறேன். என்னுடைய அண்ணன் இதைவிட சிறப்பாக என்ன செய்யப் போகிறாய் என்று கேட்டான். நான் தனி ஒருவன் 2 இயக்கு என்று கூறினேன். எனக்கு அதுதான் தோன்றியது. இதைப் பற்றி மணி சாரிடம் கேட்டேன். அவர் இதைவிட சிறப்பாக செய்வார் என்று கூறினார். இதைவிட நல்ல படம் பண்ண முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் இந்த படத்தில் கற்றுக் கொண்ட அனுபவங்களை வைத்து இனி எது செய்தாலும் சிறப்பாக செய்வேன். நாங்கள் சோர்வாக இருக்கும் போதெல்லாம் மணி சாரை பார்ப்போம். அவர் எப்போதும் ஓடிக்கொண்டே இருப்பார். அவரே ஓய்வெடுக்காமல் பணியாற்றும்போது நமக்கென்ன என்று சுறுசுறுப்புடன் பணியாற்ற சென்று விடுவோம் என்று கூறினார்.

Categories

Tech |