Categories
மாநில செய்திகள்

சிறந்த கல்வி வழங்குவதில் தமிழகம் நான்காம் இடம் : பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!

சிறந்த கல்வி வழங்குவதில் இந்திய அளவில் தமிழகம் நான்காம் இடத்தில் இருப்பதாக சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கி 3ம் நாள் விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் இடைநிற்றல் விவகாரம் குறித்த எதிர்க்கட்சியினர் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், இடைநிற்றல் விவகாரத்தில் தமிழக அரசின் புள்ளிவிவரம் சரியானது, மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தான் வேறாக உள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும் சிறந்த கல்வி வழங்குவதில் இந்திய அளவில் தமிழகம் நான்காம் இடத்தில் உள்ளது. குளித்தலை தொகுதி அரசு பள்ளியில் உடனடியாக தலைமை ஆசிரியர் நியமிக்கப்படுவார். இஸ்லாமிய மாணவிகள் நீண்ட தோற்றம் சென்று படிப்பதற்கு சிரமமாக உள்ளதால் அருகிலேயே பள்ளி அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் உறுதி அளித்துள்ளார்.

அதற்கு தமிழக அரசுக்கு விருது வழங்கும்போது சரியாக இருந்த மத்திய அரசின் புள்ளிவிவரம், இடைநிற்றல் விவரத்தில் மட்டும் தவறாக இருக்கிறதா? என அமைச்சர் கூறியதற்கு எதிராக தங்கம் தென்னரசு பேரவையில் கேள்வி எழுப்பினார்.

Categories

Tech |