இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத் அவரது 96 வது வயதில் கடந்த எட்டாம் தேதி ஸ்காட்லாந்து பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த சூழலில் அவரது மறைவிற்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ராணி எலிசபெத்தின் இறுதி ஊர்வலத்தில் இங்கிலாந்து ஸ்காட்லாந்து நாடுகளின் முப்படையைச் சேர்ந்த 6000 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். ராணியின் இறுதி ஊர்வலத்தை பார்ப்பதற்கும் இருதய அஞ்சலி செலுத்துவதற்கும் நாடு முழுவதிலும் இருந்து 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் லண்டனில் குவிந்துள்ளனர்.
இந்த நிலையில் லண்டன் நகரத்தெருக்கள் அனைத்தும் நிரம்பி வழிந்தது. மேலும் ராணியின் இறுதிச்சடங்கு மற்றும் இறுதி ஊர்வலத்தை நேரலையில் ஒளிபரப்ப அரச குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். அதன்படி இந்த நிகழ்வுகள் அனைத்தும் நாடு முழுவதும் உள்ள பூங்காக்கள் சதுக்கங்கள் திரையரங்குகளில் பெரிய திரைகளை நேரடியாக ஒளிபரப்பட்டது. மேலும் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு பின் லண்டனில் சுமார் 57 வருடங்களுக்குப் பின் முழு அரசு மரியாதையுடன் கூடிய இறுதி சடங்கு நடைபெற்றதால் தலைநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.