தமிழ் சினிமாவின் பிரபலமான காமெடி நடிகர் கூல் சுரேஷ். இவர் சிம்புவின் மாநாடு படம் திரையரங்கில் ரிலீஸ் ஆனபோது அதைப்பற்றி உணர்ச்சிவசப்பட்டு பேசியதால் மிகவும் பிரபலமானார். அதன் பிறகு தற்போது ஒவ்வொரு நடிகர்களின் படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் போதும் அதை பற்றி விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில் கூல் சுரேஷ்”நான் சமூகவலைதளங்களில் இவ்வளவு பிரபலமாக இருந்தாலும் நான் வீட்டு வாடகை கட்ட முடியாமல், வாகனத்துக்கு ‘டியூ’ கட்ட முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டு தான் இருக்கிறேன்” என்று கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார்.
சமூகவலைதளங்களில் அவருக்கு எதிரான தாக்குதல் குறித்து பேசிய அவர், “நான் உங்களை சந்தோஷப்படுத்த தானே பேசுகிறேன் என்னை ஏன் அடிக்க வேண்டும். உதைக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள்” என்று வேதனை தெரிவித்துள்ளார்.