தேமுதிக கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சி பொருளாளர் பிரேமலதா, திமுக அரசை விமர்சனம் செய்து பேசினால் அதுக்காக என் மேல கேஸ் பைல் பண்ணுவாங்க. இது மாறி எவ்வளவு கேசை வேணாலும், போடுங்க. மக்கள் பிரச்சனையை சுட்டி காட்டினால் உடனடியாக கேஸ் போடுறீங்க, எத்தனை கேஸ் வேணும்னாலும் போடுங்க, அதைப்பற்றி எல்லாம் பயப்படக்கூடிய கட்சி தேமுதிக இல்லை. இது பனங்காட்டு நரிகள், உங்கள் சலசலப்புக்கு அஞ்ச மாட்டோம்.
இப்போ கூட நம்ம டாக்டர் இளங்கோ சொன்னாரு, பாலம் அமைப்பதற்கு போராட்டம் நடத்தணும், நீங்க வரணும்னு சொன்னாங்க. மக்கள் பிரச்சினை என்றால் உடனே நான் வரேன்னு சொன்னேன். அங்கே போராட்டம் நடத்த அனுமதி இல்ல, மீறி நடத்துனா கேஸ் போடுவோம்னு சொல்லுறாங்க. தாராளமா போடட்டும், மக்களுக்காக தானே நாம போறோம்.
நம்ம ஒன்னும் கொள்ளை அடிச்சுட்டு ஜெயிலுக்கு போலயே. அதனால கேஸ் போடட்டும். ஒரு கேஸ் என்ன ? ஓராயிரம் கேஸ் கூட போடட்டும். ஜெயிலுக்கு போக தயார் என்று சொல்லிட்டு தான், நான் ஆர்ப்பாட்டத்திற்கு போனோம். ஏன்னா இந்த கட்சி மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி. எதுக்கும் பயப்பட மாட்டோம் நாங்க என கெத்தாக பேசினார்.