Categories
தேசிய செய்திகள்

மக்களே உடனே கிளம்புங்க!… ஜம்மு காஷ்மீரில் 32 வருஷத்துக்கு பின் மீண்டும்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் 32 வருடங்களுக்கு பின் திரையரங்கு திறக்கப்பட இருக்கிறது. இவற்றில் முதல் திரைப்படமாக பொன்னியின் செல்வன், விக்ரம் வேதா திரையிடப்பட உள்ளது. ஸ்ரீநகரின் சிவபோரா எனும் பகுதியில் கட்டப்பட்டுள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்கை ஜம்மு – காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா இன்று திறந்து வைத்துள்ளார். இது தொடர்பாக திரையரங்கின் உரிமையாளர் விஜய் தார், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்த பேட்டியில், திரையரங்கு திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்துவிட்டது. இன்று துணைநிலை ஆளுநர் திரையரங்கை திறந்துவைக்கிறார். 3 திரைகளுடன் 520 இருக்கைகள் உடைய மல்டிபிளக்ஸ் திரையரங்கிற்கு ஐநாக்ஸ் நிறுவனம் பங்குதாரராக உள்ளது.

இப்போது 2 திரைகளிலும், அக்டோபரில் 3வது திரையிலும் படம் திரையிடப்பட இருக்கிறது.  ஆமிர்கான் நடித்து வெளியாகி இருக்கும் லால்சிங் சத்தா திரைப்படம் இன்று சிறப்பு காட்சியாக வெளியாக உள்ளது. செப்டம்பர் 30ம் தேதி பொதுமக்களுக்காக திரையரங்கு திறக்கப்படும் போது முதல் காட்சியாக விக்ரம் வேதா திரையிடப்படவுள்ளது என்று கூறினார். இதனிடையில் மற்றொரு திரையில் பொன்னியின் செல்வம் 1 திரையிடப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பாக தெற்கு காஷ்மீரின் புல்வாமா, ஷோபியான் போன்ற மாவட்டங்களில் பல் நோக்கு திரையரங்குகளை துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா திறந்துவைத்தார்.

ஜம்மு காஷ்மீரில் சென்ற 1980ஆம் ஆண்டு வரை சுமாா் 12திரையரங்குகள் இயங்கி வந்தது. அதன்பின் திரையரங்க உரிமையாளா்களை 2 பயங்கரவாத கும்பல் அச்சுறுத்தியதால், அவை மூடப்பட்டது. அதனை தொடர்ந்து 1990-களில் திரையரங்குகளை மீண்டுமாக திறக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், 1999 செப்டம்பரில் லால் செளக்கின் மையப்பகுதியில் அமைந்துள்ள ரீகல் திரையரங்கில் பயங்கரவாதிகள் கொலைவெறி தாக்குதல் நடத்தி அதனை முறியடித்தனா். இதேபோன்று நீலம், பிராட்வே போன்ற திரையரங்குகள் திறக்கப்பட்ட போதிலும் பொதுமக்கள் மத்தியில் போதிய வரவேற்பு பெறாததால் அவை மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

Categories

Tech |