இந்திய அணியில் முன்னணி வீரரான விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் தனது 75 ஆவது சதத்தை பதிவு செய்துள்ளார். தற்போது மீண்டும் பார்மிற்கு திருமயுள்ள வீராட்கோலி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அசத்தலாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையான முதல் டி20 போட்டி இன்று நடக்கிறது. இந்நிலையில் இந்த தொடரில் விராட் கோலி ராகுல் டிராவிட்டின் மிகப்பெரிய சாதனையை தகர்க்கும் வாய்ப்பினை பெற்றுள்ளார்.
இந்திய வீரர்களை அதிக ரன்களை குவித்த வீரர்களின் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 34,357 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து அடுத்த இடத்தில் ராகுல் டிராவிட் 24,2ஒ8 ரன்களுடன் 2 வது இடத்தில் உள்ளார். தற்போது விராட் கோலி 24,002 ரன்களுடன் 3 வது இடத்தில் இருக்கிறார். இன்னும் அவர் 207 ரன்களை இந்த தொடரில் குவிக்கும் பட்சத்தில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடிக்க அருமையான வாய்ப்பு காத்திருக்கிறது. மேலும் அதிக சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் 71 சதங்களுடன் ரிக்கி பாண்டிக்கை சமன் செய்திருக்கும் கோலி மெல்ல மெல்ல சச்சினின் சாதனை நெருங்க வேண்டும் என்பதை அவரது எதிர்பார்ப்பாக உள்ளது.