Categories
தேசிய செய்திகள்

கழிவறையில் வைத்து வீராங்கனைகளுக்கு…… வெளியான அதிர்ச்சி வீடியோ…..!!!!!

கழிவறையில் வைத்து கபடி வீராங்கனைகளுக்கு உணவு விநியோகம் செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் 17 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான மாநில அளவிலான கபடி போட்டிகள் நடைபெற்றது. மூன்று நாள் நடைபெற்ற இந்த போட்டியில் மாநிலம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்த போட்டி தொடர் நடைபெற்ற மைதானத்தில் உள்ள கழிவறை பகுதியில் வீராங்கனைக்கான உணவுகள் வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்ட அதிர்ச்சி காணொலி தற்போது வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் செப்டம்பர் 16ஆம் தேதி நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், அந்த வீடியோவில் வீராங்கனைகளுக்கு உணவு மற்றும் காய்கறிகள் கழிவறை போன்ற பகுதியில் வைத்து விநியோகம் செய்யப்படுகிறது. வீராங்கனைகள் தங்கள் தட்டில் உணவை எடுத்து செல்லும் போது எதிரே பிரேமில் சிறுநீர் கழிக்கும் கிளாசெட்கள் மற்றும் வாஷ் பேசின்கள் காட்டப்படுகிறது.

Categories

Tech |