செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மயில்சாமி, எனக்கு பீட்டர் அல்போன்சும் வேணும், முகமது அலிலும் வேணும், அனந்தராமனும் வேணும். இவன் ( ஏதேனும் மத்தை சார்ந்து ) வேண்டாம்னு சொல்லுறவன் மனுஷனே கிடையாது. உண்மையை பேசும்போது, நாம எதுக்கு பயப்படனும் ?இப்படி ஒரு நிகழ்ச்சி என எனக்கு பஸ்ட் தெரியாது. ஒரு நடிகனா கேட்கும் போது, ஒரு இடத்துக்கு வாறோம் . ரொம்ப சந்தோசமா இருக்கு.
நான் இப்போதும் சொல்கிறேன்.இஸ்லாமியரையும், கிறிஸ்துவர்களையும், இந்துக்களையும் பிரிச்சி பேசுறவன் மனிதனே கிடையாது. மூன்று பேரும் ஒன்றாக சேர்ந்ததுதான் தேசியக் குடி என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். உங்க ஓட்டுகளுக்காக ஜனங்களை ஏமாத்தாதீங்க, ஜனங்கள் ஒருபோதும் ஏமாற மாட்டார்கள். உங்களுக்கு தான் ரிப்பீட் அடிப்பான்.
ஹிந்தி பேசி நான் என்ன பண்ண போறேன் ? பிரதமராக போறேனா. நாளைக்கு எனக்கு பிரதமர் போஸ்ட் கொடுங்க, நான் ஹிந்தி பேசுறேன். அது அவங்களுக்கு, எனக்கு என்னத்துக்கு ? உலகத்தில் எங்க போனாலும் உழைப்பு தான் முக்கியம், மொழி முக்கியம் இல்ல. ஆனா நீங்க இருக்கிற மொழியை மட்டும் விட்டுக் கொடுக்கிறாதிங்க என தெரிவித்தார்.