வீடு புகுந்து 7 பவுன் நகையை திருடிய மர்மநபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கலியன்விளை கிராமத்தில் சடையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகன் என்ற மகன் உள்ளார். கடந்த 7-ஆம் தேதி முருகன் குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது அங்கிருந்த கதவுகள் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 7 பவுன் நகைகள் மற்றும் ரூ.3 ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து முருகன் தட்டார்மடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வீடு புகுந்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.