Categories
மாவட்ட செய்திகள்

“எம்.ஜி.ஆர் அரசு கலை, அறிவியல் கல்லூரியில்”…. ஊட்டச்சத்து மாத விழா…..!!!!!!!

எம்.ஜி.ஆர் அரசு கலைக்கல்லூரியில் ஊட்டச்சத்து மாத திருவிழா நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம் அருகே இருக்கும் எம் ஜி ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஊட்டச்சத்து மாத விழாவானது சமூகநலம் மற்றும் மகளிர் உரிமை திறமை ஒருங்கிணைப்பு குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பாக நடந்தது.

இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி தலைமை தாங்க அங்கன்வாடி பணியாளர்கள் சார்பாக அமைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்துக் கண்காட்சியை கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பார்வையிட்டார்கள். மேலும் இந்நிகழ்ச்சியில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சாந்தி, தமிழ் துறை தலைவர்கள் சசிகுமார், கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.

Categories

Tech |