Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“திருப்பி தர மறுக்கிறார் ” மகனுடன் தீக்குளிக்க முயன்ற தம்பதி…..பரபரப்பு சம்பவம்….!!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள நரசிங்கபுரம் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பிரேம்சந்திரன்(74) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவானந்த ஜோதி(63) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குருசந்திரமூர்த்தி(30) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் பிரேம்சந்திரன் தனது மனைவி மற்றும் மகனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

இதனை அடுத்து பிரேம்சந்திரனும், அவரது குடும்பத்தினரும் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். இதனை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது பிரேம் சந்திரன் கூறியதாவது, எங்களுக்கு சொந்தமாக 17 ஏக்கர் நிலம் உள்ளது. அதே பகுதியில் வசிக்கும் ஒருவர் எங்களது நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கொண்டு தர மறுக்கிறார்.

அவரிடம் இருந்து நிலத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் வேறு வழி இன்றி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதாக பிரேம் சந்திரன் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து போலீசார் பிரேம் சந்திரனின் குடும்பத்தினரை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |