விருதுநகர் அருகே காளியம்மனுக்கு பூஜை செய்யும் வழிப்பாட்டை விட்டுக்கொடுக்க முடியாது என குறிப்பிட்ட பெண்கள் கோவில் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை அடுத்த மடத்துபட்டி கிராமத்தில் இரு சமுதாயத்தின் இடையே காளியம்மன் கோவிலில் வழிபாட்டை விட்டு கொடுப்பது தொடர்பாக நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதுகுறித்து சாத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப் பட்டதைத் தொடர்ந்து இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் முடிவு எட்டப்படாத நிலையில் ,
மீண்டும் பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெறும் என்று கூறி தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர். இந்நிலையில் நேற்றைய தினம் காளியம்மன் கோவிலில் வழிபாடு செய் விட்டுக்கொடுக்க முடியாது என்றும், மாற்று சமுதாயத்தினரை வழிபாடு செய்ய அனுமதிக்க முடியாது என்றும் 300க்கும் மேற்பட்ட பெண்கள் கோவில் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின் தகவல் அறிந்த காவல்துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உரிய முறையில் மனுக்கள் அளித்தால் மாவட்ட ஆட்சியர் மூலம் முடிவுகள் காணப்படும் என்று தெரிவித்ததன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.