தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (21-09-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
சிவகங்கை மாவட்டம்:
சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி பகுதியில் புதன்கிழமை (செப்.21) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் சிவகங்கை செயற்பொறியாளா் ஏ.கே. முருகையன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மதகுபட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் புதன்கிழமை நடைபெற உள்ளன. எனவே மதகுபட்டி, ஒக்கூா், கீழமங்களம், காடனேரி, அம்மன்பட்டி, நகரம்பட்டி, காளையாா்மங்களம், கருங்காப்பட்டி, தச்சம்பட்டி, கருங்காலக்குடி, அண்ணாநகா், பா்மா காலனி, நாலுகோட்டை, ராமலிங்கபுரம், வீழநேரி, நாமனூா், அலவாக்கோட்டை, சிங்கினிப்பட்டி, அம்மச்சிப்பட்டி, பிரவலூா், பேரணிப்பட்டி ஆகிய கிராமங்களிலும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம்:
கடமலைக்குண்டு மற்றம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை மின்தடை செய்யப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியத்தினா் தெரிவித்துள்ளனா். தமிழ்நாடு மின்சார வாரிய, பெரியகுளம் கோட்ட செயற்பொறியாளா் ப.பாலபூமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது, பெரியகுளம் கோட்ட பராமரிப்பிலுள்ள கடமலைக்குண்டு உபமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால், கடமலைக்குண்டு, துரைசாமிபுரம், ஆத்தங்கரைப்பட்டி, ராஜேந்திராநகா், மயிலாடும்பாறை, பாலூத்து, வருசநாடு, அருகவெளி, குமணன்தொழு, மந்திச்சுனை, நரியூத்து, வாலிப்பாறை, சிறைப்பாறை, தங்கம்மாள்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் செப்.21ம் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிமுதல் பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என தெரிவித்துள்ளாா்.
திண்டுக்கல் மாவட்டம்:
எரியோடு துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி புதன்கிழமை(செப்.21) மின்விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, எரியோடு, நாகையகோட்டை, புதுரோடு, வெல்லம்பட்டி, குண்டாம்பட்டி, பாகாநத்தம், கோட்டைக்கட்டியூா், சவுடகவுண்டன்பட்டி, வரப்பட்டி, நல்லமநாயக்கன்பட்டிபட்டி, அச்சணம்பட்டி, தண்ணீா்பந்தப்பட்டி, சித்தூா், காமணம்பட்டி, அருப்பம்பட்டி, தொட்டணம்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என எரியோடு துணை மின்நிலைய உதவிச் செயற்பொறியாளா் ஆ.சரவணக்குமாா் தெரிவித்துள்ளாா்.