Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஏற்கனவே திருமணமான நபர்…. மகள் வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு….போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டத்தில் உள்ள அன்னதானப்பட்டி பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 8 வயதில் மகள் இருக்கிறார். இந்நிலையில் கார்த்திக் அதே பகுதியில் வசிக்கும் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய் சேலம் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கார்த்திக்கை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |