Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டிற்கு சென்ற குடும்பத்தினர்…. வனதுறை ஊழியருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!!

வனத்துறை ஊழியர் வீட்டில் தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கட்டிக்கானபள்ளி ராஜாஜி நகரில் வனத்துறை ஊழியரான ரகமத்துல்லா(37) என்பவர் வசித்து வருகிறார். அந்த வீட்டு மாடியில் ரகமத்துல்லாவின் தந்தை பாஷா தங்கியுள்ளார். இந்நிலையில் ரகமத்துல்லா தனது குடும்பத்தினருடன் ராயக்கோட்டையில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது பாஷா கீழே வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் உடனடியாக தனது மகனுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார்.

இதனை அடுத்து வீட்டிற்கு விரைந்து வந்த ரகமத்துல்லா உள்ள சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 13 1/2 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ரகமத்துல்லா கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |