Categories
உலக செய்திகள்

கோர விபத்து…. லாரியும், பஸ்களும் அடுத்தடுத்து மோதல்…. 19 பேர் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

நைஜீரியாவில் லாரியும், பஸ்களும் அடுத்தடுத்து மோதிய விபத்தில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆப்பிரிக்க நாட்டில் நைஜீரியா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த                  நைஜீரியா பகுதியின் தலைநகரான அபுஜாவில் உள்ள நெடுஞ்சாலையில் பஸ் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்பொழுது முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்தை பஸ் முந்த முயன்றுள்ளது. இதில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் எதிர்திசையில் வந்த லாரியின் மீது பயங்கரமாக மோதியது.

அடுத்த சில நொடிகளில் பின்னால் வந்த மற்றொரு பஸ்சும் லாரி மீது மோதியது. லாரியின் மீது 2 பஸ்கள் அடுத்தடுத்து மோதிய நிலையில் 3 வாகனங்களிலும் தீப்பற்றியது. சற்று நேரத்தில் 3 வாகனங்களும் தீயில் கருகி உருக்குலைந்து போயின. இந்த கோர விபத்தில் 19 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் 18 பேர் பலத்த படுகாயமடைந்தனர். மேலும் அவர்களை அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Categories

Tech |